24.4.06

Flashback - மறக்க முடியாத முகங்கள் - மருத்துவர் ராமதாசு



"எனக்கு தெரிந்து எந்த ரஜினி ரசிகரோ, மன்றமோ பாமகவுக்கு எதிராக போஸ்டரோ, எதிர்ப்போ காட்டவில்லை."

"என்னை பொறுத்தவரை, ரஜினி நல்ல நடிகர். பழைய விசயங்களை மறந்துவிட்டேன்."

"நீங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில் 'மக்களுக்கு நல்ல விசயங்களை கற்று தரவும் நமது கலாச்சாரங்களை கட்டிக் காக்கவும் தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் சினிமாக்ள் பயன்படவேண்டும்' என்ற விசயங்களை முன்வைத்துதான் கருத்துக்களை வெளியிட்டேன். எந்த நடிகருக்கும் அவரது தொழிலுக்கு இடைஞ்சல் வரும் வகையில் எனது விமர்சனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை"

- ஜூனியர் விகடனுக்கு கொடுத்த பேட்டியில் மருத்துவர் நெம்பர் ஒன்.



"பா.ம.க., உயர்மட்ட தலைவர்கள் ரஜினி தரப்பில் பேசியாச்சு. பிரச்னையை பேசி தீர்த்துவிட்டோம்"

- குமுதம் ரிப்போர்டருக்கு கொடுத்த பேட்டியில் மருத்துவர் நெம்பர் டூ

21.4.06

Flashback - மறக்க முடியாத முகங்கள் - கலைஞர் மு. கருணாநிதி




அன்று


பாபா படப்பெட்டியை பாமகவினர் கடத்திச் சென்றபோது வாய் திறக்க மறுத்தவர்...

மதுரையில் தாக்கப்பட்ட ரஜினியின் ரசிகர்களை ஆளுங்கட்சியின் ரவுடிகள் என்று வர்ணித்தவர்

தன்னை யாராலும் அடிக்க முடியாது என்று கோவையில் சவால் விட்டவர்

ஆறு தொகுதிகளிலும் பாமகவை எதிர்த்து களமிறங்கிய ரஜினி ரசிகர்களை கிண்டலடித்தவர்



இன்று


சந்திரமுகிக்கு வாழ்த்துச் சொல்ல காத்திருக்கிறார்...

எலெக்ஷன் வந்து எட்டிப்பார்ப்பதால்!

20.4.06

FlashBack - மறக்க முடியாத முகங்கள் - ஜெ. ஜெயலலிதா



அன்று


குண்டு கலாசாரம் பற்றி குறைப்பட்ட ரசிகர்கள் மீது குண்டர்களை ஏவிவிட்டவர்

பாபா படப்பெட்டியை மரம் வெட்டிகள் கடத்தி சென்றபோது முந்திரிகாட்டுக்கு காவல் நின்றவர்

காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் மனசாட்சியை தனிமைப்படுத்த நினைத்தவர்களோடு துணை நின்றவர்

ஆறு தொகுதிகளில் அதிமுகவுக்கு கிடைத்த அதிகமான வாக்குகளை பற்றி கருத்து எதுவும் சொல்லாதவர்


இன்று


வீரப்பனால் கிடைத்த

'தைரியலட்சுமி' பாராட்டை

தக்க வைத்துக்கொள்ள போராடுகிறார்...

எலெக்ஷன் வந்து எட்டிப்பார்ப்பதால்!

http://rajinifans.blogspot.com/2005/02/blog-post_23.html

12.4.06

வருந்துகிறோம்

Image hosting by Photobucket


கன்னடத்து கண்மணியை இழந்து தவிக்கும் கன்னடத்து சகோதரர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

சந்திரமுகி - 365



வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம்
வாடா நைனா
வாழ்வு யார் பக்கம்?
அது நல்லவர் பக்கம்.

அட
ஆடியில் செய்தவன்
ஆவணி வந்ததும்
அனுபவிப்பானடா
அவன் தேடிய வினையே
வீட்டுக்கு வரலாம்
பின்னால் பாரடா!

நமக்கும் இதுதான் அவதாரம்
உன்பேரையும் என்பேரையும்
ஊரார் சொன்னால்
சந்திரனும் இந்திரனும்
நெருங்கிட வேணாமா?

வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம்...