
சமீப நாட்களாக தமிழ்மணம் திரட்டி தரும் பதிவுகளும் அவற்றில் வெளியாகியிருந்த பின்னூட்டங்களும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. குறைந்த பட்ச நாகரீகத்தைக் கூட மறந்து இன்று உலகமே புகழும் சூப்பர் ஸ்டாரையும் அவரை நெஞ்சில் வைத்து ரசிக்கும் ரசிகர்களையும் ஒருமையில் வசை பாடி வந்த பதிவுகளால் மனதளவில் காயப்பட்டிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
எந்தவொரு காலகட்டத்திலும், எந்தவொரு நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் எத்தகைய விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் நாங்கள் படித்திருக்கும் பாடம். ரஜினியும் சரி ரசிகர்களும் சரி வீண் வம்புக்கும் சண்டைக்கும் அலைந்ததில்லை. அவசியமான நேரத்தில் கூட வார்த்தை அம்புகளை எய்து யாரையும் காயப்படுத்தியதாக சரித்திரமில்லை. புயலுக்கு பின்னர் அமைதி வரும் என்று காத்திருந்து வெறுத்துப் போனதால் எங்களுக்கும் வேறு வழியில்லை. பழிக்குப் பழி என்று தமிழ் மணத்தை மேலும் சாக்கடையாக்கிவிடவும் விருப்பமில்லை.
ரஜினி என்னும் தனிநபர் மீதான வெறுப்பினால் வந்த அரிப்பை தமிழ் மணம் போன்ற பொதுவிடங்களில் அநாகரீகமான முறைகளில் தேய்த்து சுகித்துக்கொள்ள நினைக்கும் ஈனப்பிறவிகளையும், சர்ச்சைக்குரிய பதிவுகளை கையாள முடியாத தமிழ்மணத்தின் இயலாமை¨யும் கண்டித்து இன்றிலிருந்து தமிழ்மண திரட்டியிலிருந்து எங்களை விடுவித்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம்.
கடந்த நான்கு ஆண்டுகளாக எங்களது பதிவிற்கு வந்த ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் வழங்கிய அனைத்து இணைய நண்பர்களுக்கும், உதவியாக இருந்த தமிழ் மணம் குடும்பத்தாருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
பிரிவோம்! என்றாவது சந்திப்போம்!