17.5.05

Worst கண்ணா Worst!

ஆசிரியர்,
குங்கும் வார இதழ்,
181, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை - 34.

நாள் - 12.5.2005

அன்புடையீர், வணக்கம்.

ஜப்பானிய ரசிகர்கள் சந்திரமுகி காண்பதற்காக சென்னைக்கு வந்த விஷயம் குறித்த தவறான தகவல் இவ்வார குங்குமத்தில் வெளியாகியிருப்பது குறித்து அறிந்தோம். ரஜினியோடு தமிழ்க் கலாசாரத்தையும், தமிழக கோயில்களையும், காஞ்சிபுரம் புடவைகளையும் ரசிக்கும் ஜப்பானிய ரஜினி ரசிகர்களின் மனம் புண்படும்படியான தகவலை வெளியிட்டமைக்காக எங்களது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜப்பானில் சந்திரமுகி உடனடியாக வெளியிடப்படாத காரணத்தினால் எங்களது www.rajinifans.com வலைத்தளத்தின் உறுப்பினர்களாக இருக்கும் ஓசாகா நகரத்து ஜப்பானிய ரஜினி ரசிகர்கள், ஏப்ரல் பத்தாம்தேதி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, மகாபலிபுரம் போன்ற சுற்றுலாத்தளங்களுக்கு சென்றுவிட்டு சந்திரமுகி காண்பதற்காக ஏப்ரல் பதிமூன்றாம் தேதி சென்னைக்கு வந்தபோதும் அவர்களுக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது எங்களது இணையத்தளம் மட்டும்தான்.



கடல் கடந்து ரஜினியை ரசிக்க வந்திருக்கும் ஜப்பானிய ரசிகர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவதை எங்களது கடமையாக நினைத்து களமிறங்கினோம். ஜப்பானிய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் எவ்வித முயற்சிகளிலும் சந்திரமுகி தயாரிப்பாளர் தரப்போ, ரஜினி தரப்போ ஈடுபடவில்லை என்பதை இதன் மூலம் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ், 'கல்கி' வார இதழ், என்டிடிவி போன்ற செய்தி ஊடகங்கள் ஜப்பானிய ரசிகர்களின் சென்னை விஜயம் குறித்து விபரமாக செய்திகள் வெளியிட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.



குங்குமம் போன்ற பிரபலமான, பொறுப்பான பத்திரிக்கைகளில் ரஜினி மீதும் தமிழ்நாட்டின் மீதும் பாசம் வைத்திருக்கும் ஜப்பானிய ரஜினி ரசிகர்கள் மனம் புண்படும்படியான செய்திகள் வெளியாவது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தவிர்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

- for www.rajinifans.com

13.5.05

சந்திரமுகி - 30வது நாள்

தமிழகம்

வெளியான அனைத்து தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாய்....

தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே அதிக வசூல் சாதனை செய்திருக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாய்...

கர்நாடகம்

கன்னடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமான ஆப்த மித்ராவின் 200 நாள் வசூலை கடந்து...

ஆந்திரா

முதல் வாரத்தில் மூச்சு வாங்கி மூன்றாவது வாரத்தில் முன்னுக்கு வந்து ஆந்திராவை மிரட்டும்...

கேரளா

மூன்றாவது வாரத்திலும் அதீத வரவேற்பை பெற்று மலையாளப்படங்களை முந்தியிருக்கும் ஓரே தமிழ்ப் படம்.

விரிவான விபரங்களுக்கு....






வாழ்த்துக்கள்!


பாய்ஞ்சு பாயுற குதிரை
பட்டைய கிளப்புற குதிரை
சொல்லியடிக்கிற குதிரை - இது
சூப்பர் ஸ்டாரு குதிரை!

28.4.05

சந்திரமுகி முகங்கள் - ஜோதிகா

26.3.2005 - Vijay T.V





26.4.2005 - Gemini T.V





வாழ்த்துக்கள் ஜோதிகா!

19.4.05

ஒரு தடவை பார்த்தா மூணு தடவை பார்த்த மாதிரி!

சென்னை மாநகரத்தில் படம் வெளியான மூன்றே நாளில் எட்டு தியேட்டர்களில் 32 லட்ச ரூபாய் வசூல்

சென்னையின் எட்டு தியேட்டர்களில் ஐந்து தியேட்டர்களில் 23ஆம் தேதி வரையிலான அனைத்துக் காட்சிகளும் ஏற்கனவே ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டன.

சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விநியோக ஏரியாக்களில் தியேட்டர்களின் கட்டணம் மும்மடங்காக வரும் 27ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இதன்படி 10 ரூபாய் டிக்கெட் 31 ரூபாயாகவும் 15 ரூபாய் டிக்கெட் 41 ரூபாயாகவும் 20 ரூபாய் டிக்கெட் 51 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் சந்திரமுகி திரையிட்ட முப்பது நாட்களில் எதிர்பார்த்த வசூல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் அனைத்து விநியோக ஏரியாக்களிலும் படையப்பாவின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை சந்திரமுகி இனிவரும் இருவாரங்களில் முறியடிக்க இருக்கிறது.




வெற்றியை அள்ளித் தந்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி... நன்றி... நன்றி!

சூப்பர் ஸ்டார் பராக்... பராக்!

17.4.05

சந்திரமுகி : விமர்சனம்

1992. மன்னன் படத்திற்கான குமுதம் விமர்சனம். தளபதியில் சீரியஸான ரஜினியை பார்த்து சோர்ந்து போயிருந்த ரசிகர்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதியது போல அந்த கடைசி பன்ச் லைன் 'மீண்டும் ரஜினி'

படத்தில் நிறைய ஆச்சர்யப்பட வைக்கும் விஷயங்கள். டைட்டில் கார்டிலேயே கமலுக்கு நன்றி சொல்கிறார்கள். ரஜினி படத்தில் வழக்கமாக வரும் விஷயங்களுக்கெல்லாம் கெட்அவுட் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் முலாம் பூசப்பட்ட டயலாக் இல்லை; தனிமனித துதி பாடும் பக்கவாத்தியங்கள் இல்லை; ஆர்ப்பரிக்கும் செயற்கையான பின்னணி இசை இல்லை. லாஜிக்கை மீறிய மேஜிக் காட்சிகள் இல்லவே இல்லை. ரஜினி படம்தானா என்று கொஞ்சம் கிள்ளிப்பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சர்ச்சைக்கு தீனி போடும் மேட்டர் கிடைக்காமல் மீடியாதான் அல்லாடப்போகிறது, பாவம்!

லாங் ஷாட்டில் ஓடி வந்து, வில்லனை உதைக்க தாவி குதித்து அதை தூக்கிப்போட்டு வாயில் பிடித்து...அதுதான் சிகரெட் அல்ல... சூயிங்கம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சரகம், சிகரெட்டை மறந்து விட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு சூயிங்க விஷயத்தை மென்று வைக்கலாம்!

எப்போதும் ரஜினியை சுத்திதான் கதை. சந்திரமுகியில் கதையைச் சுற்றி ரஜினி! படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட் ரஜினியின் கிளாமரா அல்லது ஜோவின் நடிப்பான்னு பட்டிமன்றம் வைக்கலாம். கிளைமாக்ஸில் ஜோதிகா அசத்துகிறார் என்றால் படம் முழுக்க ரஜினி காட்டும் கிளாமர் கைதட்டலை அள்ளிக்கொள்கிறது. படு கச்சிதமான திரில்லர் திரைக்கதை. ஆவி, பழைய பங்களா என்றெல்லாம் காட்டினாலும் ஸ்பிளிட் பர்ஸனாலிட்டி பற்றிய சுவராசியமான விளக்கங்களுடன் திரைக்கதையை கவனமாக பின்னியிருக்கிறார்கள். கதையோட்டத்துடன் வரும் காமெடி, அரண்டு போயிருப்பவர்களை சிரிக்க வைக்கிறது.

ரஜினி ஏதோ சொல்ல வருகிறார்னு காதை தீட்டிக்கொண்டு கவனமாக இருந்தால் பெரிதாக எதுவுமில்லை. படத்தின் மைனஸ் பாயிண்ட், டயலாக்தான். ரஜினிக்கொன்று ஏதும் ஸ்பெஷலாக எழுதாமல் சாதாரண டயலாக்கை வைத்ததால் ரசிகர்களுக்கு ஏமாற்றம். ரஜினி படத்தில் இல்லாத சங்கதியான நான் வெஜ்
டயலாக், நாசர்-வடிவேலு ஜோடி உபயத்தில். உரைநடை தமிழையே பேச்சுத் தமிழக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று. பிரபு ஒரு காட்சியில் மல்லிகை மணம் என்கிறார். மல்லிகை வாசனை என்று சொல்லியிருந்தால் கொஞ்சம் நேட்டிவிட்டி இருந்திருக்கும்.

ஜோதிகாவா இது? சில குளோஸப் ஷாட்டுகளில் ஆச்சர்யப்படுத்துகிறார். அம்மிணிக்கு ஏதாவது அவார்டு கிடைத்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. திரைக்கதையில் அதிகமான வேலையில்லை என்றாலும் படம் முழுக்க வருகிறார் நயன்தாரா. சான்ஸ் கிடைத்தால் தன்னாலும் நன்றாக நடிக்கமுடியும் என்று சொல்லியிருக்கிறார். ரஜினிக்கு ஜோதிகா, நயன்தாராவை விட சொர்ணாவுடன்தான் காம்பினேஷன்!

'என்னை மட்டும் அவுட்டோருக்கு அனுப்பி வையுங்க.. அசத்திப்புடறேன்'னு சொல்கிற மாதிரி படத்தின் ஒளிப்பதிவு. அரண்மனைக்குள் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் காமிரா, வெளியே வந்தால் மிரட்டுகிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம். ஆர்ட் டைரக்டர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ரிசல்ட்டும் நன்றாகவே வந்திருக்கிறது. தோட்டா தரணிக்கு வாழ்த்துக்கள். மொத்தத்தில் தமிழ்சினிமாவில் சந்திரமுகி முக்கியமான படமாகவிருக்கிறது. வருஷக்கணக்கா டி.வியோடு முடங்கியிருக்கும் தாய்க்குலங்களை தியேட்டருக்கு அழைத்துவரப்போகிறது. தியேட்டரில் மட்டுமே பார்க்கத்தூண்டும் திரைக்கதை வி.சி.டி வியாபாரிகளை திணறவைக்கும்.

இன்னொரு புல் மீல்ஸ் படம் ரஜினியிடமிருந்து. ஆனால், ரஜினி ரசிகர்களுக்கு அல்ல; தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு!