13.12.04

பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

சூப்பர் ஸ்டாரின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு www.rajinifans.com - ரஜினி ரசிகர்களுக்கான இணையத்தளம் சார்பில் இலவச ரத்ததான முகாம் சென்னையில் நடைபெற்றது. முகாமில் சென்னையை சேர்ந்த 46 ரஜினி ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவர் தளபதி சத்தியநாராயணா ரத்ததான முகாமை பார்வையிட்டு விழாவை நிறைவு செய்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை www.rajinifans.com இணையத்தள நிர்வாகிகளும் ஸ்ரீராமசந்தந்திரா மெடிக்கல் மிஷன் ரத்ததான கிளை அங்கத்தினர்களும் இணைந்து செய்திருந்தனர்.

சூப்பர் ஸ்டாரின் 55வது பிறந்த நாளை ஜப்பானிய ரசிகர்களும் நேற்று கொண்டாடினர். ஓசாகா நகரத்தில் குழுமிய ஜப்பானிய ரசிகர்கள் ரஜினிகாந்த் நலம் பெற சர்வமதப் பிரார்த்தனையும் அதைத் தொடர்ந்து கேளிக்கை விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகத்தில் ரஜினி ரசிகர்கள் ரத்ததானம் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானிலும் ரஜினி ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்.

9.12.04

இரத்ததான முகாம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 55வது பிறந்த நாளை முன்னிட்டு www.rajinifans.com சார்பில் ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் மிஷனின் ஒத்துழைப்புடன் இலவச ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது. விபரங்கள் பின்வருமாறு

Venue: Shakespeare Matriculation School,
# 52A, South Sivan Koil Street,
Vadapalani Chennai-600 026

Date: 12th Dec 2004

Timing: 10AM to 1PM

ஆர்வமுள்ள உறுப்பினர்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் info@rajinifans.com, தொலைபேசி எண்கள்: ராம்கி (98400 95437) நடராஜ் (98404 99887)

6.12.04

சி.எம். ரஜினி!

சூப்பர் ஸ்டார் "சந்திரமுகி' வேலைகளில் பிஸியாக இருந்து வரும் நிலையில், நடிகர் சங்கம் நடத்திய விழா, அவரது மகள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறித்து அவரது ரசிகர்கள் இன்ட்டர்நெட்டில் சுவையாக விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.

"ரஜினி ஃபேன்ஸ் கிளப்'(www.rajinifans.com) என்ற பெயரில் உள்ள வெப்ûஸட்டில் ஜெயலலிதாவை ரஜினி பாராட்டியது குறித்து சுவையான விவாதங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. ஒரே ஒரு ரசிகர் மட்டும், ""ஜெயலலிதாவை "தைரியலட்சுமி' என்று தலைவர் எப்படிச் சொல்லலாம்?'' என நீண்ட கேள்வி எழுப்ப, அடுத்தடுத்து ரசிகர்கள் அவருக்குக் கவுன்ட்டர் கொடுக்கும் வகையில் ஜெயலலிதாவைப் பாராட்டி பதில் கொடுத்து வருகின்றனர்.

இந்த வெப்ûஸட்டில் முன்பெல்லாம் ரஜினியை எஸ்.எஸ். (சூப்பர் ஸ்டார்) என்று சுருக்கமாக அழைத்து வந்த ரசிகர்கள், இப்போது அவரை சி.எம். (சந்திரமுகி) என்று அழைப்பது சுவாரஸ்யமான தகவல்

Courtesy : Tamilan Express

C.M Rajini!

3.12.04

மறதி?!

தமிழ் சினிமா பல தருணங்களில் செலக்டிவ் அம்னீஷியாவை நம்பியிருக்கிறது. படங்கலைப் பார்க்கும்போதே ரசிகர்களுக்கு ஓரளவு செலக்டி அம்னீஷியா இல்லையென்றால் பல படங்களைப் பார்த்து முடிக்க முடியாது.

எனவே சினிமக்காரர்கள் நடத்தும் விழாக்களிலும் செலக்டிவ் அம்னீஷியா இருக்கத்தானே செய்யும். ஜெயலலிதாவுக்கு நடத்திய பாராட்டு விழாவில் சோ-சிதம்பரம் ஆகியோரின் அரசியல் நம்பிக்கை நட்சத்திரமான ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கும் அடிப்படை இதே மறதி தத்துவம்தான். ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த காலத்தில் தான் பேசியது, சவால் விட்டது, மக்களை எச்சரித்தது எல்லாம் நமக்கு மறந்துபோய்விட்டிருக்கும் என்று நினைக்காமல் இப்போது அவர் ஜெயலலிதாவை அஷ்டலட்சுமியின் அருள் பெற்ற முதல்வராக வர்ணித்துப் பேசியிருக்க முடியுமா ? இந்த செலக்டிவ் அம்னீஷியாவின் விசித்திரம்தான் என்னே. போன வருடம், அதற்கு முன் வருடம், ஐந்தாண்டுகள் முன்பு நடந்தது எல்லாம் சுத்தமாக மறந்து போய் விடுகிறது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்னால் ரஜினி பிலிம் சேம்பரில் இன்ஸ்டிட்யூட் மாணவனாக ஜெயலலிதாவை 'சைட்' அடித்தபோது, அவர் அணிந்திருந்த கறுப்பு பார்டர் வைத்த புளூ புடவை, புளூ ரவிக்கை என்று துல்லியமாக எல்லாம் நினைவுக்கு வந்து விடுகிறது.

ரஜினி மட்டும் அல்ல. மற்ற சினிமாக்காரர்களுக்கும் இதே மறதி வியாதிதான். மன்னிக்கவும் அது வியாதி அல்ல வசதி அல்லவா!

- ஞாநி

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனபிறகு திரைப்பட வர்த்தக சபையில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை புரட்சித்தலைவியாக ரஜினி விளித்தது அரசியல்வாதியின் பேச்சு போல இருந்தது என்று சொன்ன (மறுபடியும், தினமணி கதிர், 28.4.1996) ஞாநிக்கு, வீரப்பன் விவாகாரத்தை திறமையாக கையாண்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவை தைரிய லட்சுமியாக ரஜினி புகழ்ந்ததும் அரசியல் பேச்சாகத்தான் தெரியும்.

1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எழுந்த ஜெயலலிதா எதிர்ப்பு அலையை தனது அரசியல் செல்வாக்கிற்காக பயன்படுத்திக்கொண்டதை போல இப்போதிருக்கும் ஜெயலலிதா ஆதரவு (?) அலையை தனது அரசியல் செல்வாக்கிற்காக ரஜினி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார் என்று எழுதிவிடாமல் ஞாநி மறந்து போனதுதான் ஆச்சர்யம்!

- ஜெ. ரஜினி ராம்கி